செய்திகள்

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன்

Published On 2018-07-30 00:27 IST   |   Update On 2018-07-30 00:27:00 IST
தேனியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. #LoyolaCollege #Champion
தேனி:

தேனி எல்.எஸ்.எல்.மில் கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டிகளில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. இதில் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடந்தது. இதில் சென்னை லயோலா கல்லூரி அணியும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பரபரப்பான இறுதிப் போட்டி மாலையில் நடந்தது. ஆரம்பம் முதலே லயோலா கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இறுதியில் 73:44 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 2-வது இடம் பிடித்தது. இந்த போட்டித் தொடரில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-வது இடமும், சென்னை டி.ஜி. வைஸ்னவா கல்லூரி அணி 4-வது இடமும் பெற்றது.

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எல்.எஸ்.எல்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், இணை நிர்வாக இயக்குனர் பிரபாகரன் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், கூடைப்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News