செய்திகள்

ஹோட்டலை விட்டு வெளியேறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு ஓராண்டு தடை

Published On 2018-07-21 11:50 GMT   |   Update On 2018-07-21 11:50 GMT
அனுமதியின்றி இரவில் ஹோட்டலை விட்டு வெளியேறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SLC #JeffreyVandersay
இலங்கை அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் லெக்ஸ்பின்னர் ஜெஃப்ரே வாண்டர்சே இடம்பிடித்திருந்தார்.

இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் நன்னடத்தை விதியை மீறி இரவு நேரத்தில் வீரர்கள் தங்கும் விடுதியில் இருந்த வெளியேறினார். அடுத்த நாள் அணி ஹோட்லில் இருந்து புறப்படுவதற்கு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் வீரர்கள் வந்தடைய வேண்டும். ஆனால், வாண்டர்சே அந்த நேரத்திற்குள் ஹோட்டல் வந்தடையவில்லை.



இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்காததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடைவிதித்துள்ளது. அத்துடன் வீரர்கள் ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருவாயில் 10 சதவீதம் அபராதமாகவும் விதித்துள்ளது. 2-வது டெஸ்டின்போது இந்த சம்பவம் நடைபெற்றதால், உடனடியாக சொந்த நாடு திரும்பினார்.

தடைக்காலமான இந்த 12 மாதத்திற்குள் வேறுஏதாவது நன்னடத்தை விதிமுறையை மீறியதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News