செய்திகள்

வேகப்பந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லிக்கு 2-வது புற்றுநோய் ஆபரேசன்

Published On 2018-07-16 09:53 GMT   |   Update On 2018-07-16 09:53 GMT
நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைசிறந்த பந்து வீச்சாளரான ரிச்சர்ட் ஹேட்லிக்கு மீண்டும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறது. #RichardHadlee
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக 400 விக்கெட்டுக்களை தாண்டியவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹேட்லி. 1990-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 431 ரன்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 1994-ம் ஆண்டு கபில்தேவ் இவரது சாதனையை முறியடித்தார்.

தற்போது 67 வயதாகும் ரிச்சர்ட் ஹேட்லிக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவருக்கு பரிசோதனை நடத்தியதில் குடல் பகுதியில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஆபரேசன் செய்துள்ள ஹேட்லி, சிகிச்கை மேற்கொண்டு வருகிறார்.



இந்நிலையில் கல்லீரலிலும் புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இதற்கும் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News