செய்திகள்

ஆன்டோனியோ கான்டேவை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது செல்சி

Published On 2018-07-13 17:31 IST   |   Update On 2018-07-13 17:31:00 IST
இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியாக செல்சி தனது தலைமை பயிற்சியாளரான ஆன்டோனியோ கான்டேவை அதிரடியாக நீக்கியுள்ளது. #Chelsea
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் முன்னணி அணியாக செல்சி விளங்கி வருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ஆன்டோனியோ கான்டோ.

இவரது தமைமையில் செல்சி 2016-17 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது. அப்போது செல்சி அணி 38 போட்டியில் 30 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. 13 வெற்றிகளை தொடர்ச்சியாக ருசித்திருந்தது.



கான்டேவிற்கும் அந்த அணியின் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கான்டேவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே செல்சி அவரை பதவியில் இருந்து தூக்கியுள்ளது.

Tags:    

Similar News