செய்திகள்

500 சர்வதேச போட்டிகளில் விளையாடி எம்எஸ் டோனி சாதனை

Published On 2018-07-07 16:37 IST   |   Update On 2018-07-07 16:37:00 IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன எம்எஸ் டோனி சர்வதேச அளவில் 500 போட்டிகளில் விளையாடியுள்ளார். #MSDhoni
இந்திய தேசிய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி மூன்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2004-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த எம்எஸ் டோனி இன்று தனது 37-வது வயதை பூர்த்தி செய்துள்ளார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறது.

நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எம்எஸ் டோனி இடம் பிடித்திருந்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து போட்டிகளையும் சேர்த்து 500-வது சர்வதேச போட்டியாகும். இதன்மூலம் 500 சர்வதேச போட்டியில் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 664 போட்டிகளிலும், டிராவிட் 509 போட்டிகளில் விளையாடியுள்ளனர். எம்எஸ் டோனி 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். #Sachin #Dravid
Tags:    

Similar News