செய்திகள்

கூடுதல் நேரம் என்றால் நான்கு மாற்று வீரர்களை களம் இறக்க யுஈஎப்ஏ அனுமதி

Published On 2018-07-05 14:01 GMT   |   Update On 2018-07-05 14:01 GMT
சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் கால்பந்து தொடரில் கூடுதல் நேரத்தில் நான்கு மாற்று வீரர்களை களம் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #UEFA
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிவடைந்து நாளை காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

நாக்அவுட் சுற்று போட்டிகளில் ஆட்டத்தின் 90 நிமிடத்தில் போட்டி சமநிலையில் இருந்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் 15 நிமிடத்தில் சமநிலையாக இருந்தால், 2-வது 15 நிமிடம் வழங்கப்படும். இந்த 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் சமமான வாய்ப்பு பெற்றிருந்தால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.



இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் மூன்று வீரர்களுக்குப் பதில் மாற்று வீரர்களை ஒரு அணி களம் இறக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த உலகக்கோப்பையில் 90 நிமிடத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் ஆட்டம் நடைபெற்றால் நான்கு வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று பிபா விதிமுறையை மாற்றியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சாம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோப்பா லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் இதுபோன்று நான்கு வீரர்களை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. #UEFA #ChampionsLeague #EuropaLeague
Tags:    

Similar News