செய்திகள்

பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ஏ 354 ரன்கள் குவிப்பு

Published On 2018-06-29 14:35 GMT   |   Update On 2018-06-29 14:35 GMT
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 354 ரன்கள் குவித்துள்ளது. #INDA
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.


147 ரன்கள் குவித்த விஹாரி

அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.


102 ரன்கள் அடித்த பிரித்வி ஷா

பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News