செய்திகள்

இங்கிலாந்து - இந்தியா தொடரில் வர்ணனையாளராக பணிபுரிகிறார் கங்குலி

Published On 2018-06-28 11:46 GMT   |   Update On 2018-06-28 11:46 GMT
இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரின்போது வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி. #ENGvIND #Ganguly
இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டரை மாதங்களாக நடக்க இருக்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இந்த தொடரை இந்தியாவில் ஒளிப்பரப்பு உரிமை பெற்றுள்ள டிவி கங்குலியை நியமித்துள்ளது.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘கடந்த காலங்களில் இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலான இந்திய அணிக்கு சவாலாக இருந்துள்ளது. எனினும், தற்போதுள்ள மிகச்சிறந்த அணியால் தொடரில் மிகவும் நெருக்கமான போட்டியை வெளிப்படுத்துவோம் என்று நினைக்கிறேன்.



இங்கிலாந்தில் நான் விளையாடிய குறித்து ஏராளமான நினைவுகள் உள்ளன. இந்த தொடரின்போது என்னுடைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார்.

கங்குலி உடன் சுனில் கவாஸ்கர், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஸ்வான் ஆகியோரும் வர்ணனையாளராக செயல்பட இருக்கின்றனர்.
Tags:    

Similar News