செய்திகள்

ஜெர்மனி வீரர்கள் மோசமாக விளையாடினர் - பயிற்சியாளர் அதிருப்தி

Published On 2018-06-18 06:16 GMT   |   Update On 2018-06-18 06:16 GMT
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோவிற்கு எதிராக ஜெர்மனி வீரர்கள் மோசமாக விளையாடியதாக பயிற்சியாளர் கூறியுள்ளார். #WorldCup2018 #GERMEX
நடப்பு சாம்பியனான ஜெர்மனி நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி தோற்பது இது முதல் முறையாகும்.

இந்த தோல்வியால் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லொய் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறியதாவது:-

முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. நாங்கள் கோலை நோக்கி பல ஷாட்டுகள் அடித்தோம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் மற்றும் பந்தை கடத்துவதில் திறமையாக செயல்படவில்லை.

முதல் ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஜெர்மனி அணி தோல்வி இருந்து மீண்டு வரும் திறமை வாய்ந்தது. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்றார்.  #WorldCup2018 #FIFA2018 #GERMEX
Tags:    

Similar News