செய்திகள்

சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்றார் சுனில் செத்ரி

Published On 2018-06-12 17:35 GMT   |   Update On 2018-06-12 17:35 GMT
இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் செத்ரிக்கு இந்தாண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. #SunilChhetri #IndianFootballerAward2018

கொல்கத்தா:

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக ஐதராபாத் நகரை சேர்ந்த சுனில் செத்ரி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பையை இந்தியா கைப்பற்றியது. கென்யாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சுனில் செத்ரி இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா வீரர் மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அவரது இந்த சாதனையை பாராட்டும் வகையில் இந்தாண்டுக்கான சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருது சுனில் செத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்று நடந்த விருது வழங்கும் விழாவில் இந்திய கால்பந்து சம்மேளனத்தில் துணை தலைவர் சுப்ரதா தத்தா சுனில் செத்ரிக்கு விருதை வழங்கினார்.

இந்த விழாவில் சுனில் செத்ரியில் மாமனாரும், முன்னணி கால்பந்து பயிற்சியாளருமான சுப்ரதா பட்டாச்சாரியா கலந்துகொண்டார். #SunilChhetri #IndianFootballerAward2018
Tags:    

Similar News