செய்திகள்

துணைக் கேப்டன் பதவிக்கு நோ சொல்லமாட்டேன்- நாதன் லயன்

Published On 2018-06-08 13:15 GMT   |   Update On 2018-06-08 13:15 GMT
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பதவி வாய்ப்பு வந்தால், ‘நோ’ சொல்லமாட்டேன் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். #AUS
ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக வார்னரும் செயல்பட்டு வந்தனர். ஆஸ்திரேலியா சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக் காரணமாக வார்னர் செயல்பட்டார் என்றும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மூன்று பேருக்கும் தடைவிதித்தது.



தடைவிதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்தது. அப்போது விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், துணைக் கேப்டன் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனுக்கு துணைக் கேப்டன் பதவிக்கான ஆசை துளிர்விட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘துணைக் கேப்டன் வாய்ப்பை எனக்கு வழங்கினால், நான் அதை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன்’’ என்றார்.
Tags:    

Similar News