செய்திகள்

இனி திரும்ப வரமாட்டேன் - கிரிக்கெட் வீரர் அப்ரிடி திட்டவட்டம்

Published On 2018-06-02 21:16 GMT   |   Update On 2018-06-02 21:16 GMT
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, இனி திரும்ப வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். #ShahidAfridi #ShahidAfridiretirement

லண்டன்:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் அப்ரிடி உலக லெவன் அணியின் கேப்டனாக விளையாடினார். இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டி ஷாகித் அப்ரிடியின் கடைசி சர்வதேச போட்டியாகும். இந்த போட்டிக்கு பின் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்தார். இந்த போட்டியின் போது, அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர். 



இதற்கு முன் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐந்து முறை அப்ரிடி அறிவித்துள்ளார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். இருப்பினும் மீண்டும், மீண்டும் தனது முடிவை மாற்றி அப்ரிடி விளையாடி வந்தார். ஆனால், இந்த முறை, சர்வதேச போட்டிகளில் இதுவே எனது கடைசி போட்டியாகும் என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

வெஸ்ட்இண்டீஸ் அணியுடனான போட்டியின் நடுவே களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த அப்ரிடியிடம் சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவீர்களா? என வர்ணனையாளர் நாசர் ஹூசைன் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அப்ரிடி, சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்கும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும். அதிகமான வயது, காயத்தால் இனி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த இயலாது. அதனால், இதுதான் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடைசிப் போட்டியை விளையாடுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார். #ShahidAfridi #ShahidAfridiretirement
Tags:    

Similar News