செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 350/8

Published On 2018-05-25 21:42 GMT   |   Update On 2018-05-25 21:42 GMT
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் நாளில் பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
லார்ட்ஸ்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.

தொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.

பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் ஆசம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை 
உயர்ந்தது.

ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் ஆசம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷதப் கான் அரை சதமடித்து அசத்தினார்.

இதனால், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. மொகமது அமிர் 19 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK
Tags:    

Similar News