செய்திகள்

4 ஓவரில் 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணியின் தம்பி

Published On 2018-05-18 00:39 GMT   |   Update On 2018-05-18 01:24 GMT
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி 4 ஓவர் வீசி 70 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi

பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில், பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி பந்து வீசினார். பொதுவாக ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் பசில் தம்பி எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கினார். 

பசில் தம்பி வீசிய 8-வது ஓவரில் பெங்களூர் அணி 19 ரன்கள் எடுத்தது. அதன்பின் அவர் வீசிய 12-வது ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து 15-வது ஓவரை தம்பி வீசினார். அந்த ஓவரில் பெங்களூர் அணி 14 ரன்கள் எடுத்தது. இறுதியில் 19-வது ஓவரும் அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரையும் எதிரணியினர் விட்டு வைக்கவில்லை. 19-வது ஓவரில் 19 விட்டுக்கொடுத்தார். 



இதன்மூலம் அவர் வீசிய 4 ஓவர்களில், பெங்களூர் அணியினர் 70 ரன்கள் அடித்தனர். இதில் 6 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் 4 ஓவரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவேயாகும். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi
Tags:    

Similar News