ஐ.பி.எல்.(IPL)

அடிபட்ட புலி என்ன செய்யும் என்பதை நன்கு அறிவீர்கள் - ஹர்பஜன் சிங்

Published On 2018-05-04 02:58 IST   |   Update On 2018-05-04 09:31:00 IST
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், அவ்வப்போது தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். #CSK #IPL2018 #HarbhajanSingh #VIVOIPL #KKRvCSK

கொல்கத்தா;

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.



இந்நிலையில், கொல்கத்தா அணியிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளதாவது, “என்னுடைய வெற்றிகள் என்னை எப்போதும் தனிமையில் தான் சந்திக்கின்றன. ஆனால் என்னுடைய தோல்விகளோ ஊரார் முன்னே கூச்சல் போடுகிறது என்னுள் நான் தோற்காதவரை அது வெற்றியே முட்டி மோதுவோம் @chennaiipl அடிபட்ட புலி என்ன செய்யும் என்பதை நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறேன் #மீண்டுவருவேன்” என அவர் கூறியுள்ளார். #CSK #IPL2018 #HarbhajanSingh #VIVOIPL #KKRvCSK

Similar News