செய்திகள்

முஜீப்பின் வளர்ச்சிக்கு அஸ்வின் கேப்டன்ஷிப் முக்கிய காரணம்- பஞ்சாப் பயிற்சியாளர்

Published On 2018-05-01 15:33 GMT   |   Update On 2018-05-01 15:33 GMT
அஸ்வினின் கேப்டன்ஷிப் முஜீப் உர் ரஹ்மான் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என கிங்ஸ் லெவன் பஞ்சாப் பயிற்சியாளர் கூறியுள்ளார். #IPL2018 #KXIP
ஐபிஎல் 11-வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ஆப்கானிஸ்தானின் 17 வயதே ஆன முஜீப் உர் ரஹ்மான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து எடுத்தது. இளம் வீரருக்கு இவ்வளவு பணம் செலவழிக்கிறதே? அதற்கு அவர் தகுதியானவர்தானா? என்ற கேள்விகள் எழும்பின.

ஆனால் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அத்துடன் 7 விக்கெடடுக்கள் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 6.51 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

உச்சக்கட்டமாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி முத்திரை பதித்தார். டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வின் முஜீப் உர் ரஹ்மான் மீது நம்பிக்கை வைத்து கடைசி ஓவரை அவரிடம் கொடுத்தார். அஸ்வின் வைத்துள்ள நம்பிக்கையை முஜீப் உர் ரஹ்மான் வீணடிக்கவில்லை.



இளம் வீரரான முஜீப் உர் ரஹ்மான் ஆட்டத்திறன் மேம்பட அஸ்வினின் கேப்டன்ஷிப் உதவிகரமாக இருக்கிறது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான பிராட் ஹாட்ச் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிராட் ஹாட்ச் கூறுகையில் ‘‘முஜீப் உர் ரஹ்மான் தான் ஒரு சிறந்த சுய கட்டுப்பாட்டான வீரர் என்பதை காண்பித்துள்ளார். இந்த இளம் வயதிலே, அவர் தனது திறமையை மீது நம்பிக்கை வைத்துள்ளார். இதற்கான நற்சான்றிதழை அஸ்வினின் கேப்டன்ஷிப் திறமைக்குதான் கொடுக்கனும். அஸ்வின் முஜீப்பை அதிக அளவில் ஊக்கப்படுத்துகிறார். சிறந்த கேப்டன் திறமையான வீரர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவுவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News