செய்திகள்

பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் 5-வது வெற்றி- சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வில்லியம்சன் பாராட்டு

Published On 2018-04-27 05:36 GMT   |   Update On 2018-04-27 05:58 GMT
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பாராட்டை தெரிவித்துள்ளார்.#IPL #SunrisersHyderabad #KingsXIPunjab
ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 13 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் 19.2 ஓவரில் 119 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டும், சகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐதராபாத் பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் 2-வது தோல்வியை சந்தித்தது. வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் கனே வில்லியம்சன் கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் 180 ரன் வரை எடுக்க முடியாது. 145 ரன் இலக்கு மிகவும் கடினமானது. ஆனால் எங்களை 132 ரன்னுக்குள் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர்.

எங்களது பந்து வீச்சாளர்கள் கடினமாக போராடினர். ஆனால் பவர்பிளேவில் அதிக ரன் கொடுத்தோம். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வருவார்கள் என்பதை அறிவோம்.

நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

நல்ல நிலையில் இருந்து வெற்றியை தவறவிட்டு விட்டோம். இதுபோன்று 20 ஓவர் போட்டியில் நடப்பது ஒன்றுதான்.

பீல்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் 20 ரன் வரை கூடுதலாக கொடுத்துவிட்டோம். கேட்ச்சுகளை தவறவிடுவதற்கு எந்த காரணங்களையும் சுட்டி காட்ட முடியாது என்றார். #IPL #SunrisersHyderabad #KingsXIPunjab
Tags:    

Similar News