செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியில் வெஸ்ட் புரும்விக் அணியின் ஜாய் ரோட்ரிக்ஸ்

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி

Published On 2018-04-15 19:03 GMT   |   Update On 2018-04-15 19:22 GMT
இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #EPL #ManCity
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், வெஸ்ட் புரும்விக் அல்பியான் அணியும் மோதின.

இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் வெஸ்ட் புரும்விக் அணியின் ஜாய் ரோட்ரிகஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றி பெற செய்தார். இதனால் வெஸ்ட் புரும்விக் அணி 1-0 என்ற கணக்கில் மான்செஸ்ட்ர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இதையடுத்து, புள்ளிப் பட்டியலில் மான்செஸ்ட்ர் யுனைடெட் அணி 86 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதுகுறித்து மான்செஸ்டர் சிட்டி அணி கேப்டன் வின்சென்ட் கொம்பனி டுவிட்டரில் கூறுகையில், இந்த வெற்றியை ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்குகிறோம் என பதிவிட்டுள்ளார். #EPL #ManCity #Tamilnews
Tags:    

Similar News