செய்திகள்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது நேபாளம்

Published On 2018-03-16 14:00 GMT   |   Update On 2018-03-16 14:00 GMT
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நேபாளம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது. #ICC
உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் டாப்-7 இடம் பிடிக்கும் அணிகள் வரும் 2022 வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெறும். இதில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுடன் சேர்த்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வரும் 2022 வரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் அந்தஸ்து பெற்றன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஹாங்காங், நேபாளம், பபு்புவா நியூ கினியா இடையே கடும்பாட்டி நிலவியது. 7 முதல் 10 வரையிலான இடத்துக்கான போட்டியில் பப்புவா நியூ கினியாவை நேபாளம் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து ஹாங்காங்கை வென்றது.



7-வது இடத்திற்கு நேபாளம், நெதர்லாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், நெதர்லாந்து அணி ஏற்கணவே ஒருநாள் அந்தஸ்து பெற்றுள்ளதால், நேபாளத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேபாளத்தின் அந்தஸ்து 2022 வரை நீடிக்கும்.

அரசின் தலையீடு உள்ளிட் பல பிரச்சினையால் கடந்த 2016 ஏப்ரல் மாதம் நேபாள கிரிக்கெட் சங்கத்தை ஐசிசி தடை செய்தது. அதன்பிறகு நேபாள கிரிக்கெட் ஐசிசி வசம் சென்றது. இதனால் நேபாள அணிக்கு ஐச்சி போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏதும் இல்லை என்றாலும், ஐசிசியின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிதி ஏதும் கிடைக்கவில்லை. தற்போது 20222 வரை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இனிமேல் ஐசிசியின் நிதியுதவி கிடைக்கும்.
Tags:    

Similar News