செய்திகள்
டர்பன் டெஸ்டில் வெற்றியை நெருங்கியது ஆஸ்திரேலியா
டர்பனில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. #SAvAUS #AUSvSA
ஜொகன்னஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 351 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 162 ரன்களும் சேர்த்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 227 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
முதல் இன்னிங்சில் 189 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 417 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்கோர் 29 ரன்னாக இருக்கும்போது தென்ஆப்பிரிக்கா முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த அம்லா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் எல்படபிள்யூ ஆனார். அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் பரிதாபமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.
இதனால் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் வேகத்தில் தென்ஆப்பிரிக்கா குறைந்த ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் நங்கூரம் போன்று நின்ற மார்கிராம் உடன் டி ப்ரூயின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது.
குறிப்பாக மார்கிராம் அணியின் நிலைமையை புரிந்து தவறு செய்யாமல் சிறப்பாக விளையாடினார். தென்ஆப்பிரிக்கா 136 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ப்ரூயின் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் மார்கிராம் அரைசதம் அடித்து களத்தில் நின்றார். 6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்தியா தொடர் மற்றும் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், இந்த இன்னிங்சில் நம்பிக்கையுடன் விளையாடினார். களத்தில் நிற்க நிற்க டி காக் ஆட்டத்தில் அனல் பறந்தது. மும்மூர்த்திகளின் பந்தை எளிதாக எதிர்கொண்டார்.
டி காக் நம்பிக்கையுடன் விளையாட ஆரம்பித்ததும், மார்கிராம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடி அவர் 171 பந்தில் 14 பவுண்டரியுடன் சதம் அடித்தார். ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய வேகத்தை எதிர்த்து சிறப்பாக விளையாடி சதம் அடித்த மார்கிராம் அனைவரின் கரகோஷத்தை பெற்றார். அவர் சதம் அடித்த சிறுது நேரத்தில் டி காக் 68 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கிராம் 143 ரன்களில் மிச்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சரியாக பயன்படுத்திகொண்ட ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டார்க் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
வெர்னான் பிளாண்டரை 6 ரன்களிலும், கேஷவ் மகராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரை ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஸ்டார்க் ஆட்டமிழக்க செய்தார். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 290 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அதன்பின் மார்னே மார்கல் களமிறங்கினார். அவர் 27 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் 4-வது நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
டி காக் 81 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. அதே சமயம் டி காக் - மார்னே மார்கல் இருவரும் நிலைத்து நின்று விளையாடி இன்னும் 124 ரன்கள் சேர்த்தால் தென்ஆப்ரிக்கா அணி வெற்றி பெறும். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. #SAvAUS #AUSvSA