செய்திகள்

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை

Published On 2018-02-08 13:05 IST   |   Update On 2018-02-08 13:05:00 IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். #Dhoni #MSDhoni #MSD400 #Dhoni400 #MSD
நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் பந்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் மெர்க்ராமை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார்.

315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் (295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். இதன்மூலம் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். சர்வதேச அளவில் 4-வது விக்கெட் கீப்பர் ஆவார்.

சங்ககாரா (இலங்கை-482) முதல் இடத்திலும், கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா-472) 2-வது இடத்திலும், மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா-424) 3-வது இடத்திலும் உள்ளனர்.

Similar News