செய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
வெலிங்டன் நகரில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.#NZvPAK
வெலிங்டன்:
நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று வெலிங்டன் நகரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் சதம் அடித்தார். அவருக்கு இது 10-வது சதமாகும். வில்லியம்சன் 117 பந்தில் 115 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முனரோ 35 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), நிக்கோலஸ் 50 ரன்னும் எடுத்தனர்.
ஹசன்அலி 3 விக்கெட்டும், முகமது அமீர், ரூயஸ் பகர் ஜமான், பகீம் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து 316 ரன் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. மழை குறுக்கிட்டதால் டக் வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி ஓவரானது 30.1 ஆக குறைக்கப்பட்டு, 228 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 54 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டான பகர் ஜமான்- சதாப் கான் ஜோடி பொறுப்புடன் ஆடி வந்தனர். சதாப் கான் 28 ரன்னில் அவுட் ஆனார்.
30.1 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி 9-ம் தேதி நெல்சன் நகரில் நடைபெற உள்ளது. #NZvsPAK