செய்திகள்
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய 16 வயது இளம் வீராங்கனை
மும்பையைச் சேர்ந்த 16 வயதே ஆன இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரான 19 வயதிற்குபட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அவுரங்காபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- சவுராஷ்டிரா அணிகள் மோதின. மும்பை அணியில் 16 வயதே ஆகும் இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பிடித்திருந்தார்.
இவர் சவுராஷ்டிரா வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய ஜெமிமா 163 பந்தில் 202 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் மும்பை 50 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
இந்த தொடரில் ஜெமிமா இரண்டு சதங்கள் அடித்துள்ளார். சராசரி 300-க்கு மேல் உள்ளது. 10 போட்டிகளில் 700 ரன்களை எட்டியுள்ளார்.