செய்திகள்

பெண்கள் கிரிக்கெட்: 136 வைடுகள் வீசிய மணிப்பூர், நாகாலந்து அணி வீராங்கனைகள்

Published On 2017-11-02 16:28 IST   |   Update On 2017-11-02 16:28:00 IST
பிசிசிஐ நடத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூர், நாகாலந்து வீராங்கனைகள் 136 வைடு பந்துகள் வீசினர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வடகிழக்கு- பீகார் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் - நாகாலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதில் முஷ்கான் (54), போரி (24)  ஆகிய வீராங்கனைகள் மட்டும் இரட்டை இலக்கை எட்டினார்கள். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தார்கள். பந்து வீசிய மணிப்பூர் வீராங்கனைகள் 94 வைடுகள் வீசினார்கள். இதனால் 15.4 ஓவர்கள் அதிகப்படியாக வீச நேரிட்டது.



பின்னர் மணீப்பூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 27.3 ஓவரில் 98 ரன்னில் சுருண்டது. நாகாலந்து வீராங்கனைகள் 42 வைடுகள் வீசினார்கள். செடெர்னி (17), ரொனிபாலா தொக்கொம் (24) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். நாகாலந்து வீராங்கனை போரி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



22 யார்டு நீள ஆடுகளத்தில் வடகிழக்கு பெண்கள் அதிக அளவில் பயிற்சி பெறாததே இத்தனை வைடு பந்துகள் வீசுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Similar News