செய்திகள்

2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி

Published On 2017-10-06 13:21 IST   |   Update On 2017-10-06 13:21:00 IST
அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி பெற்றன.


அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.

ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது.

மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் ஜெர்மனி 9 ஆட்டத்தில் விளையாடி அனைத்திலும் வென்று 27 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

இங்கிலாந்து 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 டிராவுடன் 23 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இதன் மூலம் ஜெர்மனி, இங்கிலாந்து அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

Similar News