செய்திகள்

உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு

Published On 2017-09-11 10:23 GMT   |   Update On 2017-09-11 10:23 GMT
பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டது.



அதன்படி முதல் போட்டி நாளை தொடங்குகிறது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் லாகூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அணி கடந்த சில தினங்களாக துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 13 வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்தனர். பாகிஸ்தான் சென்றடைந்த அவர்கள் வரலாறு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் உள்பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.
Tags:    

Similar News