செய்திகள்

பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ: பார்சிலோனா விருப்பத்தை நிராகரித்தது லிவர்பூல்

Published On 2017-08-10 13:05 GMT   |   Update On 2017-08-10 13:05 GMT
பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ கொடுக்க வந்த பார்சிலோனாவின் ஆஃபரை நிராகரித்துள்ளது இங்கிலீஸ் பிரிமீயர் லீக் கிளப் லிவர்பூல்.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணிக்கு விளையாடிய பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர், பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பி.எஸ்.ஜி. அணி பார்சிலோனாவிற்கு டிரான்ஸ்பர் பீஸாக 222 மில்லியன் யூரோ வழங்கியது.

நெய்மர் சென்றதால் அவருக்கு மாற்றாக முன்னணி வீரர் ஒருவரை பார்சிலோனா அணி தேடிவருகிறது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் லிவர்பூல் அணியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிலிப் கவுன்டினோ இடம்பிடித்துள்ளார்.



இவரை கடந்த 2013-ல் இண்டர் மிலன் அணியில் இருந்து 8.5 மில்லியன் பவுண்டுக்கு லிவர்பூல் வாங்கியது. கடந்த சீசனில் லிவர்பூல் அணிக்காக 14 கோல்கள் அடித்தவர் கவுன்டினோ. இதனால் கடந்த ஜனவரி மாதம் லிவர்பூல், கவுன்டினோவுடனான ஒப்பந்தத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது.

இந்நிலையில் நெய்மருக்குப் பதிலாக கவுன்டினோவை வாங்க பார்சிலோனா விரும்பியது. இதற்காக 100 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. ஆனால், பார்சிலோனாவின் ஆஃபரை லிவர்பூல் நிராகரித்துவிட்டது.
Tags:    

Similar News