செய்திகள்

பந்து வீச்சைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் முதல் இடத்தை பிடித்தார் ஜடேஜா

Published On 2017-08-08 16:16 IST   |   Update On 2017-08-08 16:16:00 IST
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா, டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்போது சிறப்பாக பந்து வீசியதால் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடம்பிடித்து அசத்தினார். மற்றொரு இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் ஜடேஜா.



கொழும்பு டெஸ்டில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் அவுட்டாகாமல் 70 ரன்கள் குவித்திருந்தார். ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா, தவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது 438 புள்ளிகள் பெற்றுள்ள ஜடேஜா, ஏற்கனவே முதல் இடத்தில் இருந்த சாஹிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளியுள்ளார். சாஹிப் அல் ஹசன் 431 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Similar News