செய்திகள்
2001 கொல்கத்தா டெஸ்டிற்குப் பிறகு பாலோ-ஆன் கொடுக்க தயங்கும் கேப்டன்கள்
கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன்கள் பாலோ-ஆன் கொடுக்க மறுக்கிறார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
ஒருவேளை ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த நிலையில் ஆல்அவுட் ஆனால் பாலோ-ஆன் என்று அழைக்கப்படும். அப்போது முதலில் பேட்டிங் செய்த அணி பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடராலாம். அல்லது 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கும் அணியை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்க அழைக்கலாம்.
அப்படி அந்த அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து முதல் அணி எடுத்த ரன்னை எட்டவில்லை என்றால், முதல் அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும். இல்லையெனில் 2-வது அணி நிர்ணயித்த இலக்கை சேஸிங் செய்ய வேண்டும்.
2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணி பின்தங்கியிருந்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணி பாலோ-ஆன் கொடுப்பது வழக்கம். இந்த போட்டிக்குப்பின் கேப்டன்கள் பாலோ-ஆன் என்ற வார்த்தையை பயன்படுத்த தயங்குவார்கள்.
ஏனெனில், கொல்கத்தா போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் வாக் பேட்டிங் தேர்வு செய்தார். ஹெய்டன் (97), ஜஸ்டின் லாங்கர் (58), ஸ்டீவ் வாக் (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 171 ரன்களில் சுருண்டது. லஷ்மண் மட்டும் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஸ்டீவ் வாக் பாலோ-ஆன் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.
தொடக்க வீரர்கள் ரமேஷ் (30), தாஸ் (39), தெண்டுல்கர் (10), கங்குலி (48) அவுட்டான பின்னர் லஷ்மண் உடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். டிராவிட் களம் இறங்கும் முன் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் சேர்த்திருந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லஷ்மண் - டிராவிட் ஆஸ்தரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 9 பேர் பந்து வீசியும் ஒன்னும் செய்யமுடியவில்லை.
லஷ்மண் 281 ரன்னும், டிராவிட் 180 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்தது. 178 ஓவர்கள் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியாவை விட 383 ரன்கள் அதிகம் பெற்றது. 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹர்பஜன் சிங்கின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 212 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாலோ-ஆன் தேர்வு செய்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் மிகுந்த வருத்தம் அடைந்தார். அத்துடன் இந்தியாவில் விளையாடும்போது பாலோ-ஆன் தேர்வு செய்யமாட்டேன் என்று தெரிவித்தார்.
இந்த போட்டிக்குப்பின் அவர் மட்டுமல்ல, மற்ற அணிகளும் தற்போது வரை பாலோ-ஆன் எடுக்க தயங்குகிறது.
கொல்கத்தா டெஸ்டிற்குப்பிறகு 141 முறை பாலோ-ஆன் சம்பவம் நடந்துள்ளது. இதில் 80 முறை பாலோ-ஆன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 66 முறை அணி வெற்றி கண்டுள்ளது. 14 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. வெற்றி சராசரி 82.50 ஆகும்
61 முறை பாலோ-ஆன் தேர்வு செய்யவில்லை. இதில் 56 முறை வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. வெற்றி சராசரி 91.80 ஆகும்.
1981-ல் இருந்து 2001 வரை 77 முறையில் 70 முறை பாலோ-ஆன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2001-க்குப் பிறகு 141 முறையில் 80 முறைதான் பாலோ-ஆன் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் முடிவடைந்த காலே டெஸ்டில் இலங்கை அணி பாலோ-ஆன் ஆனது. ஆனால், இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.