செய்திகள்

கொழும்பு டெஸ்ட்: ஜிம்பாப்வே 356 ரன்னில் ஆல்அவுட்: இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 293

Published On 2017-07-15 14:19 GMT   |   Update On 2017-07-15 14:19 GMT
கொழும்பு டெஸ்டில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 356 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 293 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் எர்வின் சதத்தால் ஜிம்பாப்வே அணி 90 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்திருந்தது. எர்வின் 151 ரன்னுடனும், டிரிபானோ 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிரிபானோ மேலும் 3 ரன்கள் எடுத்து 27 ரன்னில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். எர்வின் 160 ரன்கள் எடுத்து குமாரா பந்தில் அவுட்டாக ஜிம்பாப்வே 94.4 ஓவரில் 356 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 5 விக்கெட்டும், குமாரா மற்றும் குணரத்னே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


அரைசதம் அடித்த சண்டிமல்

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கருணா ரத்னே 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

அரைசதம் அடித்த உபுல் தரங்கா 71 ரன்னில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். கேப்டன் சண்டிமல் 55 ரன்னிலும், முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 41 ரன்னிலும், தில்ருவான் பெரேரா 33 ரன்னிலும் வெளியேற, இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. குணரத்னே 24 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி கிரிமர்

தற்போது இலங்கை அணி 63 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 3 விக்கெட்டுக்கள் உள்ளன. இலங்கையை விட ஜிம்பாப்வே அணி சுமார் 40 ரன்கள் முன்னிலைப் பெற்று, 2-வது இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் ஒருநாள் தொடரை போல் சரித்திர வெற்றி பெற வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News