செய்திகள்

டிராவிட்டின் ஜூனியர் அணி பயிற்சியாளர் பதவி மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு

Published On 2017-06-20 10:14 GMT   |   Update On 2017-06-20 10:14 GMT
டிராவிட்டின் ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க கிரிக்கெட் ஆலோசனைக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ராகுல் டிராவிட். ஏற்கனவே இவர் ஒரு வருட ஒப்பந்தத்தில் இந்த பதவியை வகித்தார்.

அப்போது 10 மாதங்கள் பிசிசிஐ-யில் பணி செய்துவிட்டு, இரண்டு மாதங்கள் ஐ.பி.எல். அணியான டெல்லி டேர்டெவில்ஸ்-க்கு ஆலோசகராக செயல்பட்டார். இப்படி பதவி வகிப்பது ‘இரட்டை ஆதாயம் பெறுதல்’ விதிமுறைக்கு உட்பட்டது என விமர்சனம் எழும்பியது.



மேலும், இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் டிராவிட் விரும்ப நினைத்தால், இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்திற்கு உட்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனால் அவர் மீண்டும் நீடிப்பாரா? என்ற கேள்வி எழும்பியது. இந்நிலையில் கங்குலி, தெண்டுல்கர் மற்றும் லஷ்மண் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக்குழு டிராவிட்டின் பதவியை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. ஆனால், விதிமுறை மற்றும் நிபந்தனைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை.
Tags:    

Similar News