செய்திகள்
பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமனம்
பார்சிலோனா கால்பந்து கிளப் அணயின் புதிய பயிற்சியாளராக அத்லெடிக் பில்பாயோ அணியின் பயிற்சியாளரான எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர் லூயிஸ் என்ரிக். இவர் பார்சிலோனா அணியின் மானேஜராக கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார். தற்போது வரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் இந்த சீசனோடு பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பார்சிலோனா ஆணி கோபா டெல் ரெய் கோப்பையை வென்றதுடன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக எர்னெஸ்டோ வால்வேர்டெ பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
53 வயதாகும் எர்னெஸ்டோ வால்வேர்டெ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஸ்பெயின் நாட்டின் தேசிய அணிக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அலெவ்ஸ், செஸ்டாயோ, எஸ்பான்யோல், பார்சிலோனா, அத்லெடிக் பில்பாயோ, மல்லோர்கா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடியுள்ளார்.
2013 முதல் 2017 வரை அத்லெடிக் பில்பாயோ அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். தற்போது பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.