செய்திகள்

100 மணி நேரம் சமூக சேவை: குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசி. வீரருக்கு நூதன தண்டனை

Published On 2017-05-26 11:20 GMT   |   Update On 2017-05-26 11:20 GMT
குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்லுக்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல். 26 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி மது அருந்திய நிலையில் கார் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். ஹாஸ்டிங்ஸ் பகுதியில் வரும்போது போலீசார் இவரது காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அப்போது பிரேஸ்வெல் குடித்திருந்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஹாஸ்டிங்ஸ் மாவட்ட கவுன்சிலில் நடைபெற்றபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, கார் ஓட்டுவதற்கு ஒருவருடம் தடைவிதித்ததுடன், 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏற்கனவே, 2008 மற்றும் 2010-ல் மது அருந்தி கார் ஓட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் காயம் ஏற்பட்டதால், அதன் பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. அடுத்த சீசன் வரை அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. இதனால் கூடுதல் தண்டனை வழங்கப்படமாட்டாது’’ என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News