செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது புனே

Published On 2017-04-24 16:40 GMT   |   Update On 2017-04-24 16:40 GMT
மும்பையில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில், முதலில் ஆடிய புனே அணி, மும்பை அணிக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28-வது ஆட்டம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதையடுத்து புனே அணியின் அஜிங்கியா ரகானே, ராகுல் திருப்பதி ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து 76 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ரகானே 38 ரன்களும், திருப்பதி 45 ரன்களும் சேர்த்தனர்.

ஆனால், அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கேப்டன் ஸ்மித் 17 ரன்கள் மட்டுமே அடித்தார். டோனி 7 ரன்கள், ஸ்டோக்ஸ் 17 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் விறுவிறுப்பாக ஆடிய மனோஜ் திவாரி 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.

மும்பை தரப்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஹர்பஜன் சிங் , மிட்செல் ஜான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

Similar News