செய்திகள்

டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னைத் தொட்ட முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார் யூனிஸ்கான்

Published On 2017-04-24 09:42 IST   |   Update On 2017-04-24 09:42:00 IST
ஜமைக்காவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 23 ரன்கள் எடுத்தபோது 10 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் யூனிஸ்கான்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது, பின்னர் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

அந்த அணியின் அனுபவ வீரர் யூனிஸ்கான் இந்த தொடருடன் ஓய்வு பெறுகிறார். இந்த போட்டிக்கு முன் அவர் 115 டெஸ்ட் போட்டிகளில் 9977 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் 23 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சதனையை படைக்கும் வகையில் களமிறங்கினார்.

முதல் இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 23 ரன்களைத் தொடும்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார். ஆசிய கண்டத்தில் தெண்டுல்கர், டிராவிட், சங்ககரா, ஜெயவர்தனே ஆகியோருக்குப்பின் 10 ஆயிரம் ரன்களை கடக்கும் ஐந்தாவது வீரர் யூனிஸ்கான் ஆவார்.



2000-த்தில் முதல் சதத்தை பதிவு செய்து யூனிஸ்கான், இதுவரை 34 சதங்கள் அடித்துள்ளார். 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 313 ரன்கள் குவித்தது ஒரு இன்னிங்சில் அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும்.

Similar News