செய்திகள்
ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பெங்களூர்:
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிக்களுக்கு இடையிலான லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச தீர்மானத்தார்.
புனே அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே மற்றும் திரிபாதி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். ரகானே 30(25), திரிபாதி 31(23) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கேப்டன் ஸ்மித் உடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய தோனி 28(25) ரன்களில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து ஸ்மித் 27(24) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
தோனி அவுட்டாகும் போது இந்திய அணி 16 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்திருந்தது. 130 ரன்கள் சேர்ப்பதற்கு புனே அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 150 ரன்கள் எட்டுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இருப்பினும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணி தரப்பில் ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் மில்னே தலா இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்தனர். 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது.