செய்திகள்

அம்பயர் தயவால் டக்கில் இருந்து தப்பி 39 பந்தில் 68 ரன்கள் குவித்த உத்தப்பா

Published On 2017-04-15 22:21 IST   |   Update On 2017-04-15 22:21:00 IST
அம்பயர் அவுட் கொடுக்காததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தப்பா டக் அவுட்டில் இருந்து தப்பி 39 பந்தில் 68 ரன்கள் குவித்து அணியை பெற்றி பெற வைத்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரின் 2-வது பந்தில் முதல் விக்கெட்டாக சுனில் நரைனை இழந்தது. அடுத்து ராபின் உத்தப்பா களம் இறங்கினார். அந்த ஓவரின் 3-வது பந்தை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பவுன்சராக வீசப்பட்ட பந்து உத்தப்பாவின் பேட்டில் உரசிச் சென்றது. விக்கெட் கீப்பர் ஓஜா மற்றும் கேப்டன் வார்னர் அப்பீல் கேட்டனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து விளையாடிய உத்தப்பா 39 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணி 172 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இவரது ரன்குவிப்பால் கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அம்பயர் தயவால் டக் அவுட்டில் இருந்து தப்பிய உத்தப்பா, 68 ரன்கள் குவித்ததுடன், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Similar News