செய்திகள்

பார்முலா 1 கார்பந்தயம் நாளை தொடக்கம்

Published On 2017-03-25 06:49 GMT   |   Update On 2017-03-25 06:49 GMT
பார்முலா 1 கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது.
மெல்போர்ன்:

கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும்.

இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது.

முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்னில் நாளை நடக்கிறது. சீனா (ஏப்ரல் 9-ந்தேதி), பக்ரைன் (ஏப்ரல் 16), ரஷியா (ஏப்ரல் 30), ஸ்பெயின் (மே 14), மெகானாக்கோ (மே 28), கனடா (ஜூன் 11), அசா பெய்ஜான் (ஜூன் 25), ஆஸ்திரியா (ஜூலை 9),

இங்கிலாந்து (ஜூலை 16), அங்கேரி (ஜூலை 30), பெல்ஜியம் (ஆகஸ்ட் 27), இத்தாலி (செப்டம்பர் 3), சிங்கப்பூர் (செப்டம்பர் 17), மலேசியா (அக்டோபர் 1), ஜப்பான் (அக்டோபர் 8), அமெரிக்கா (அக்டோபர் 22), மெக்சிகோ (அக்டோபர் 29), பிரேசில் (நவம்பர் 12), அபுதாபி (நவம்பர் 26) ஆகிய இடங்களிலும் ‘பார்முலா1’ பந்தயம் நடக்கிறது.

கடந்த ஆண்டு சாம்பியனான ஜெர்மனி வீரர் ரோஸ் பெர்க் ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் இந்த ஆண்டு ‘பார்முலா 1’ பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே 3 முறை ‘பார்முலா 1’ பட்டத்தை (2008, 2014, 2015) வென்று இருந்தார்.

4 முறை சாம்பியனான செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி), டேனியல் ரிக்கார் டோ (ஆஸ்திரேலியா), வெர்ப்ஸ்டன் (நெதர்லாந்து) போன்ற வீரர்களும் சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பில் உள்ளனர்.

Similar News