செய்திகள்
மான்செஸ்டர் யுனைடெட்டின் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்கா கிளப் செல்கிறார்
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ ஃபையர் அணிக்குச் செல்கிறார்.
ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர். பிரேசில் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை ஜெர்மனி அணி வாங்க முக்கிய காரணமாக இருந்தவர். இவர் கடந்த வருடம் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
32 வயதாகும் இவர் கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2002-ல் இருந்து 2015-ம் ஆண்டு வரை பேயர்ன் முனிச் அணிக்காக சுமார் 13 வருடங்கள் விளையாடினார். அதன்பின் 2015-ல் இங்கிலாந்தின் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறினார். அந்த அணியின் பயிற்சியாளர் மவுரினோ இவருக்கு சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் அவர் அமெரிக்காவில் மேஜர் லீக் சாசர் தொடருக்கான சிகாகோ ஃபையர் அணியில் விளையாட முடிவு செய்தார்.
இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் சம்மதம் தெரிவித்துவிட்டது. விசா தொடர்பான வேலை முடிந்த பின்னர் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் அமெரிக்கா செல்வது உறுதியாகும். சிகாகோ ஃபையர் அணி இவருக்கு ஒரு வருடத்திற்கு 4.5 மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளது.