செய்திகள்

18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கிப்போட்டி

Published On 2017-02-11 07:57 GMT   |   Update On 2017-02-11 07:56 GMT
18 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆக்கிப்போட்டி சென்னையில் 13-ந் தேதி நடத்தப்படுகிறது.
சென்னை:

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் 2-வது டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு மாநில அளவிலான ஆக்கிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தப்போட்டி நாளை மறுநாள் (13-ந் தேதி) முதல் 19-ந் தேதி வரை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் ஐ.சி.எப், தெற்கு ரெயில்வே, ஐ.ஒ.பி., வருமானவரி, இந்தியன் வங்கி, சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு போலீஸ், மத்திய கலால்வரி, வெஸ்லி ஆக்கி கிளப் உள்பட 18 அணிகள் பங்கேற்கின்றன.

“நாக்அவுட்” முறையில் இந்த போட்டி நடக்கிறது. அரை இறுதி 18-ந் தேதியும், இறுதி ஆட்டம் 19-ந் தேதியில் நடக்கிறது.

இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2,70 லட்சமாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையும், 2-வது இடத்துக்கு ரூ.70 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

இது தவிர சிறந்த வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை போட்டி அமைப்புக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன், இயக்குனர் ஜே.பி.சுகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Similar News