செய்திகள்

39 சிக்ஸ், 14 பவுண்டரியுடன் டி20 போட்டியி்ல முச்சதம் விளாசிய டெல்லி வீரர்

Published On 2017-02-07 14:47 GMT   |   Update On 2017-02-07 14:47 GMT
டி20 கிரிக்கெட் போட்டியில் 39 சிக்சர்களுடன் முச்சதம் அடித்து டெல்லி பேட்ஸ்மேன் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
டெல்லியில் கிளப் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மாவி லெவன் - பிரென்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாவி லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரராக பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன மோகித் அலாவத் களம் இறங்கினார். தொடக்கம் முதலே பிரென்ட்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்க விட்டார். இதனால் 18 ஓவருக்குள் 250 ரன்னைத் தொட்டார்.

கடைசி இரண்டு ஓவரில் 50 ரன்கள் சேர்த்தன் மூலம் 20 ஒவர்கள் முடிவில் 72 பந்தில் 300 ரன்கள் குவித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இதில் 39 சிக்ஸ், 14 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸ் விளாசி மோகித், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 34 ரன்கள் சேர்த்தார்.

இதற்கு முன் இலங்கையைச் சேர்ந்த தனுகா பதிரனா இங்கிலாந்தின் லங்காஷைரில் நடைபெற்ற உள்ளூர் லீக் போட்டியில் 72 பந்தில் 277 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது. இதில் 29 சிக்ஸ் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும்.

மற்றொரு வீரர் கவுரவ் 86 ரன்கள் சேர்த்தார்.

Similar News