செய்திகள்
20 ஓவர் உலக கோப்பையில் டி.ஆர்.எஸ், ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர்: ஐ.சி.சி.
20 ஓவர் உலக கோப்பையில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்துவது மற்றும் ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என்று ஐ.சி.சி.யின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி முறையில் மாற்றங்களை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
2019-ம் ஆண்டில் இருந்து 2 ஆண்டுக்கு டெஸ்ட் லீக், 13 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி லீக் மற்றும் 20 ஓவர் உலக கோப்பைக்கான மண்டல தகுதி அளவு ஆகியவை நடத்தப்படுகிறது.
20 ஓவர் போட்டியில் ஆட்டம் டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது.
இதே போல ஓருநாள் போட்டியிலும் சூப்பர் ஓவர் முறையை கடை பிடிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி டையில் முடிந்தால் மட்டுமே சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும்.
மேலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்துவது என்றும் ஐ.சி.சி.யின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஒரு அணிக்கு ஒரு முறை மறுஆய்வு அனுமதி வழங்கப்படும். சமீபத்தில் இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் தொடரில் நடுவரின் முடிவு குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டது.
இதை தொடர்ந்து 20 ஓவர் போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறையை அமல்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்து முன்னணி வீரர் ஜோ ரூட் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.