செய்திகள்

பிப்ரவரி 20-ல் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - பி.சி.சி.ஐ அறிவிப்பு

Published On 2017-02-03 19:53 IST   |   Update On 2017-02-03 19:53:00 IST
2017 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.
மும்பை:

உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது.

2017-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 20-ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வீரர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னனி அணிகள், அவ்வகை வீரர்களை விலை அதிகமாகக் கொடுத்து ஏலம் எடுக்க தயாராகவே உள்ளனர்.

Similar News