செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான வங்காள தேச கிரிக்கெட் அணி அறிவிப்பு

Published On 2017-02-01 15:40 IST   |   Update On 2017-02-01 15:40:00 IST
இந்தியாவிற்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வங்காள தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான தங்கள் அணியை இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. முஸ்டாபிஜூர் ரஹிம் (கேப்டன்), 2. தமீம் இக்பால், 3. சவுமியா சர்கார், 4. மெஹ்முதுல்லா, 5. சாஹிப் அல் ஹசன், 6. மெஹதி ஹாசன் மிராஸ், 7. இம்ருல் கெய்ஸ், 8. மொமினுல் ஹக்யூ, 9. சபீர் ரஹ்மான், 10. லித்தோன் தாஸ், 11. தஸ்கின் அஹமது, 12. ஷுவாஷிஷ் ராய், 13. தைஜூல் இஸ்லாம், 14. கம்ருல் இஸ்லாம் ரபி, 15. ஷபியுல் இஸ்லாம்.

வங்காளதேச அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் முதன்முறையாக தற்போது இந்தியா வந்து விளையாட இருக்கிறது.

Similar News