செய்திகள்

இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி

Published On 2017-01-13 10:06 GMT   |   Update On 2017-01-13 10:06 GMT
இரண்டு கேப்டன் முறை இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதன்முதலாக மகேந்திரசிங் டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார்.

ஓய்வு அறிவிற்குப்பின் இன்று முதன்முதலாக டோனி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இரண்டு கேப்டன் (டெஸ்ட் அணி, ஒருநாள் அணி) இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது. எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய இது சரியான நேரம். விராட் கோலியின் தலைமையின் இந்திய அணி இதுவரை பெறாத வகையில் சிறப்பான வெற்றியை பெறும்.

நான் சாம்பியன் டிராபி வரை கேப்டனாக நீடித்தால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆஸ்திரேலியா தொடரின் இடையிலேயே நான் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன் என்பதை அறிய விரும்புகிறார்கள்’’ என்றார்.

Similar News