செய்திகள்

பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இம்தியாஸ் அஹமது மரணம்

Published On 2016-12-31 10:21 GMT   |   Update On 2016-12-31 10:21 GMT
பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த மூத்த வீரரான இம்தியாஸ் அஹமது தனது 88-வது வயதில் மரணம் அடைந்தார்.
1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி முதன் முதலாக டெஸ்ட் அரங்கில் கால்பதித்தது. அந்த அணியில் இம்தியாஸ் அஹமதும் ஒருவர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

88 வயதாகும் இவர் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



டெஸ்ட் போட்டிகளில் 2079 ரன்கள் சேர்த்துள்ள அவர், 1955-ல் நியூசிலாந்திற்கு எதிராக 209 ரன்கள் குவித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வக்கார் ஹசன் மட்டும் தற்போது உயிரோடு உள்ளார்.

Similar News