செய்திகள்

ஒலிம்பிக்கில் 5 தங்கத்துடன் கின்னஸ் சாதனைப் படைத்த சீன வீராங்கனை ஓய்வு

Published On 2016-12-15 12:49 GMT   |   Update On 2016-12-15 12:49 GMT
ஒலிம்பிக்கில் டைவிங் பிரிவில் ஐந்து தங்க பதக்கங்கள் வென்ற சீன வீராங்கனை வு மின்சியா கண்ணீர் மல்க தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 3 மீட்டர் சின்குரோனைஸ்டு ஸ்பிரிங்போர்டு டைவிங் பிரிவில் தங்கம் வென்றவர் சீன வீராங்கனை வு மின்சியா.

தற்போது இவர் தனது உடல்நிலை பயிற்சிக்கு ஏற்றவகையில் ஒத்துழைக்காததால் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

‘‘ஓய்வு முடிவை எடுத்ததில் நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய உடல்நிலை தொடர்ந்து பயிற்சிக்கு ஒத்துழைக்கவில்லை. நான் 6 வயதில் இருந்தே டைவிங் கற்றுக் கொண்டேன். தேசிய அணியில் 13-வது வயதில் இணைந்தேன். ஏறக்குறைய 25 வருடம் குறுகிய காலம் போன்று தோன்றலாம். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’’ என்று 31 வயதாகும் வு மின்சியா தெரிவித்துள்ளார்.



2004-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தனது 19 வயதில் அறிமுகமான அவர், இதுவரை ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் டைவிங் பிரிவில் அதிக பதக்கம் வென்ற வீராங்கனை என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

Similar News