செய்திகள்

ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள்: சாதனைப் படைப்பாரா விராட் கோலி

Published On 2016-11-17 21:50 IST   |   Update On 2016-11-17 21:50:00 IST
ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 151 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

நாளை 2-வது நாள் ஆட்டத்தில் மேலும் 49 ரன்கள் எடுத்தால் விராட் கோலி இரட்டை சதம் அடிப்பார். அப்படி இரட்டை சதம் அடித்தால் ஒரே வருடத்தில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைப்பார்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது 200 ரன்கள் அடித்தார். கடந்த மாதம் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரின்போது இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் 211 ரன்கள் எடுத்தார்.

தற்போது 151 ரன்கள் எடுத்துள்ளார். நாளை 49 எடுத்தால் ஒரே வருடத்தில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Similar News