செய்திகள்

ரோகித் சர்மாவிற்கு ஆபரேசன் நல்லபடியாக முடிந்தது: பி.சி.சி.ஐ.

Published On 2016-11-12 11:43 GMT   |   Update On 2016-11-12 16:36 GMT
ரோகித் சர்மாவின் வலது கால் தொடையில் ஆபரேசன் நல்லபடியாக முடிந்தது என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா. கடந்த மாதம் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய ஆபரேசன் செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினார்கள்.

இதனால் ரோகித் சர்மா ஆபரேசன் செய்து கொள்வதற்காக லண்டன் சென்றார். நேற்று அவருக்கு சிறந்த முறையில் ஆபரேசன் நடந்த முடிந்ததாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும், ரோகித் சர்மா குறித்து பி.சி.சி.ஐ.யும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘வலது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக லண்டனில் நேற்று ரோகித் சர்மாவிற்கு ஆபரேசன் நடைபெற்றது. ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததையொட்டி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கிறார்.

காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணியில் இணைவதற்காக பி.சி.சி.ஐ.-யின் மருத்துவக்குழு தொடர்ந்து அவரது காயம் குறித்து கண்காணிக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

Similar News