செய்திகள்

ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்துகிறார் சாக்‌சி மாலிக்

Published On 2016-08-21 23:08 IST   |   Update On 2016-08-21 23:08:00 IST
பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற சாக்‌சி மாலிக், ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறவுள்ள நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்துகிறார்.
ரியோ டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, துடுப்பு படகு, ஜூடோ, ஆக்கி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், கோல்ப், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர். 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு இரண்டு பதக்கமே கிடைத்துள்ளது. பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளி பதக்கமும், பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பிரிவில் அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக் வெண்கல பதக்கமும் வென்றனர்.

கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், வெண்கல பதக்கம் வென்ற சாக்‌சி மாலிக், ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறவுள்ள நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்துகிறார்.

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் 0-3 என்ற கணக்கில் மங்கோலிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

Similar News